டெல்லி: டெல்லியில் இன்று ஒரேநாளில் 1,113 பேருக்கு கொரோனா உறுதி செய்ய்ப்பட்டுள்ளது.
டெல்லியில் தொடக்கத்தில் அதிகளவாக காணப்பட்ட கொரோனா பாதிப்பு சில நாடகளாக சற்று குறைந்தே வருகிறது. இந்நிலையில், டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது:
டெல்லியில் இன்று மேலும் 1,113 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,48,504 ஆக அதிகரித்து உள்ளது.
இன்று ஒரேநாளில் 14 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4153 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் இன்று 1,021 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,33,405 ஆக உயர்ந்துள்ளது. தலைநகரில் இதுவரை 10,946 பேர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
[youtube-feed feed=1]