டெல்லி: தலைநகர் டெல்லியில் ஒரே நாளில் 2,948 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 200 நாடுகளில் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந் நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று ஒரே நாளில் 2,948 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து அங்கு பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 80,188 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 66 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஒட்டு மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 2558 ஆக உயர்ந்துள்ளது.