டெல்லி: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வரும் விவசாயிகளை சந்தித்து, ஆதரவு தெரிவித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு உள்ளார். மத்தியஅரசின் இந்த அடாவடி செயலுக்கு நாடு முழுவதும் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
மோடி அரசு அமைல்படுத்தி உள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியில் லட்சக்கணக்கான விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாது 13வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று நாடு முழுவதும் விவசாயிகளுக்கு ஆதரவாக பாரத் பந்த் நடைபெற்று வருகிறது. டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவர்கள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகளுக்கு உணவு , தண்ணீர் மற்றும் அவர் குளிருக்கு தேவையான போர்வை போன்ற பொருட்களை வழங்கி தங்களது ஆதரவை கொடுத்து வருகின்றனர்.
முன்னதாக, கடந்த வாரம், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இது பாஜகவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால், அவர் தன்னார்வலராக பங்கேற்றதாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், தற்போது கெஜ்ரிவால் கெஜ்ரிவால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வீட்டுக்கு வெளியே காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான நடவடிக்கையை மத்தியஅரசு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆம்ஆத்மி கட்சி டிவிட் மூலம் தெரிவித்துள்ளது. அதில், பாஜகவின் டெல்லி காவல்துறை மாண்புமிகு முதல்வர் ஸ்ரீ rஅர்விந்த்கேஜ்ரிவாலை நேற்று சிங்கு எல்லையில் விவசாயிகளை சந்தித்ததிலிருந்து வீட்டுக் காவலில் வைத்துள்ளது அவரது இல்லத்தை விட்டு வெளியேறவோ அல்லது நுழையவோ யாரும் அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.