சென்னை: ஐபிஎல் தொடரில், இன்று நடைபெறும் மற்றொரு போட்டியில், ஐதராபாத் அணிக்கெதிராக டாஸ் வென்ற டெல்லி அணி, முதலில் பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி, புள்ளிப் பட்டியலில், டெல்லி அணி மூன்றாவது இடத்திலும், ஐதராபாத் அணி ஏழாவது இடத்திலும் உள்ளன. இரு அணிகளுமே, இன்று தங்களின் ஐந்தாவது லீக் போட்டியில் மோதுகின்றன.

ஐதராபாத் அணி, எளிதில் வெல்லக்கூடிய போட்டிகளில் தோற்று, கடைசியாக ஒரு வெற்றியைப் பதிவுசெய்தது. டெல்லி அணி, புதிய எழுச்சியுடன் காணப்படுகிறது.

தற்போது பேட்டிங் தேர்வுசெய்துள்ள டெல்லி அணி, துவக்கத்திலேயே அதிரடி ஆட்டத்தை தொடங்கியுள்ளது. அந்த அணி, 2.1 ஓவரிலேயே, விக்க‍ெட் இழப்பின்றி 26 ரன்களை சேர்த்துள்ளது.

இன்றையப் போட்டியில் வென்று, இரு அணிகளும், தங்களின் புள்ளிக் கணக்கை உயர்த்த எத்தனிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.