டெல்லி:  டெல்லியை முற்றுகையிட ஜேபி உள்பட தடைகளை உடைத்தெறியும் ஆயுதங்களுடன் மீண்டும் புறப்பட்ட விவசாயிகள் அரியாணா எல்லையில் கைது செய்யப்பட்டனர்.  இதனால் பரபரப்பு நிலவி வருகிறது.

வேளாண் விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூா்வ உத்தரவாதம் அளித்தல், பயிா்க்கடன் தள்ளுபடி என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பஞ்சாப் விவசாயிகள் தலைநகர் டெல்லியை நோக்கி பேரணியிக சென்றுகொண்டிருக்கின்றனர். இதற்கிடையில், மத்தியஅரசு அவர்களிடம் 4 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எடுக்கப்படவில்லை. இதனால், இரண்டு நாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடர்ந்து உள்ளனர்.

டெல்லி செல்லும் விவசாயிகளின் பேரணியை தடுக்க மாநில எல்லைகளில், கடுமையாக தடுப்புகளைய கொண்டு மத்தியஅரசு தடுத்து வருகிறது. ஆனால், விவசாயிகள் அந்த தடுப்புகளை அகற்றியும், உடைத்தும் டெல்லி நோக்கி முன்னேறி வருகின்றனர். இன்றைய பேரணியின்போது, அடுப்புகளை அகற்றும் வகையில் ஜேசிபி உள்பட பல்வேறு உபகரணங்களுடன் டெல்லி  நோக்கி புறப்பட்ட விவசாயிகள் பேரணியை  அரியான மாநில எல்லையில்  தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

ஏற்கனவே பஞ்சாப்-ஹரியாணா எல்லைப் பகுதிகளில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள விவசாயிகள், அங்கேயே தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில்,  , இன்று மீண்டும் டெல்லியை முற்றுகையிட விவசாயிகள் புறப்படுவார்கள் என்று விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். மேலும், சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகளை தகர்ப்பதற்காக ஜேசிபி போன்ற இயந்திரங்களுடன் 14,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பஞ்சாப் – ஹரியாணா எல்லையில் படையெடுத்துள்ளனர்.

இதற்கிடையே, சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், விவசாயிகளை தடுத்து நிறுத்தவும் பஞ்சாப் காவல்துறைக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.  இதைத்தொடர்ந்து இன்று டெல்லி நோக்கி சென்ற நூற்றுக்கணக்கான விவசாயிகளை ஹரியாணா எல்லையில் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், ஹரியாணா எல்லையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் மற்றும் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து கூறிய விவசாயிகளின் தலைவர் சர்வான் சிங் பந்தேர் கூறுகையில், “நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். கூட்டங்களில் கலந்து கொண்டோம், ஒவ்வொரு விஷயமும் விவாதிக்கப்பட்டது, இப்போது மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். நாங்கள் அமைதியாக இருப்போம்.  பிரதமர் முன் வந்து எங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும்.ரூ 1.5-2 லட்சம் கோடி என்பது பெரிய தொகை அல்ல.இந்த தடைகளை நீக்கி டெல்லியை நோக்கி பேரணி செல்ல அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

விவசாயிகளின் முன்னேற்பாடுகள் ஒருபுறம் இருக்க காவல்துறையும், துணை ராணுவப்படையினரும் விவசாயிகள் டெல்லிக்குள் நுழையாத வண்ணம் அனைத்து தடுப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். டிக்ரி மற்றும் சிங்கு எல்லைகளில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல அடுக்கு தடுப்பு வேலிகள் அமைத்துள்ளனர். கான்க்ரீட் தடுப்புகள், வாகனங்கள் முன்னேற இயலாத வண்ணம் இரும்பு ஆணிகள் பதிக்கப்பட்ட தடுப்புகள் என முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். காசிபூர் எல்லையில் 2 பாதைகள் மூடப்பட்டுள்ளன.