துபாய்:
டெல்லி கேப்பிடல்ஸ்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இடையே நடந்த முதல் தகுதிச்சுற்று போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா தொடக்கத்தில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஹேசில்வுட் வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். தீபக் சாஹர் வீசிய 3-வது ஓவரில் நான்கு பவுண்டரிகள் விளாசினார். இதனால் டெல்லி 3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 32 ரன்கள் எடுத்தது.
அடுத்த ஓவரை ஹேசில்வுட் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் தவான் ஆட்டமிழந்தார். அவர் 7 பந்தில் 7 ரன்கள் எடுத்தார். 5-வது ஓவரை ஷர்துல் தாகூர் வீசினார். இந்த ஓவரில் பிரித்வி ஷா இரண்டு சிக்சர்கள் விளாசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடித்தது. இதனால் டெல்லி கேப்பிடல்ஸ் 5 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்தது. அடுத்த ஓவரில் ஷ்ரேயாஸ் அய்யர் ஆட்டமிழந்தார். அவர் 8 பந்தில் ஒரு ரன் மட்டுமே அடித்தார்.
தொடர்ந்து விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்துள்ளது. ரிஷாப் பண்ட் 35 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் ஹேசில்வுட் 2 விக்கெட்டும் ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
173 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது. இந்த அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 63 ரன்கள் அடித்தார்.
ஐபிஎல் தொடரில் நாளை ஷார்ஜாவில் நடக்க உள்ள எலிமினேட்டர் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன.