டில்லி

டில்லி பாஜக இணைய தளம் விஷமிகளால்  ஹேக் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி பதவி ஏற்கும் இந்த நேரத்தில் பலரும் பாஜகவின் இணைய தளத்தை பார்வை இட்டு வருகின்றனர். குறிப்பாக தலைநகர் டில்லியில் பலரும் பதவி ஏற்பு விழாவை உடனுக்குடன் லைவ் ஆக பார்க்க பாஜகவின் அதிகார புர்வ இளைய தளைத்தை மிகவும் விரும்புகின்றனர்.

இந்நிலையில் டில்லி பாஜக இணைய தளம் ஒரு சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதை காணும் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் புதிய நிகழ்வுகள் ஏதும் இந்த இணையத்தில் பதிவு செய்ய முடியாமல் உள்ளது.

இந்த இணையதளத்தில் வழக்கமாக மோடி அல்லது அமித்ஷா படம் முகப்பில் அமைக்கப்பட்டிருக்கும். தற்போது இந்த முகப்பு படமாக தற்போது பன்றிக் கறி வறுவல் படமும் அதன் செய்முறையும் இடம் பெற்றுள்ளன. இது குறித்து பாஜகவினர் இது வரை எவ்வித விளக்கமும் அளிக்கவில்லை.