டெல்லி:

லைநகர் டெல்லி சட்டமன்ற தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணி முதலே வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மூத்த தலைவர்கள் முதல் இளைஞர்கள் வரை அனைவரும் சுறுசுறுப்பாக தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

குடியரிசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவி சவிதா கோவிந்துடன் குடியரசு தலைவர் மாளிகை வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரியா வித்யாலயா பள்ளியில் தங்களத வாக்குகளை செலுத்தினர்.

தற்போதைய டெல்லி முதல்வரும், ஆம்ஆத்மி கட்சித் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது குடும்பத்தினருடன் வந்து  புதுடெல்லி பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கினை செலுத்தினர்.

முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன்சிங் தனது மனைவி கவுர்சரன்சிங் உடன் புதுடெல்லி தொகுதியில் உள்ள நிர்மான் பவன் வாக்குச்சாவடியில் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.

முன்னாள் காங்கிரஸ் கட்சித் தலைவரும், இளந்தலைவருமான ராகுல்காந்தி அவுரங்கசீப் சாலையில் உள்ள பூத் எண் 81&82 வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார்.

100வயதான கலிதரா மண்டல் என்ற மூதாட்டி கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள சித்தரஞ்சன் பார்க் பகுதியில்உள்ள எஸ்டிஎம்சி தொடக்கப்பட்ள்ளியில் தனது வாக்கினை செலுத்தினார்.

மேலும், டெல்லியில் வசிக்கும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் உள்பட அரசியல் கட்சித் தலைவர்கள், மூத்த தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.