பிரதமரின் ‘சுயம் நிதி யோஜனா’ திட்டத்தின் கீழ் தெருஓர வியாபாரிகளுக்கு கடன் வழங்கப்படுகிறது.
மத்தியபிரதேச மாநிலம் ரெய்சன் மாவட்டத்தில் உள்ள பேகம்கஞ்ச் நகராட்சியில் உள்ள பல வங்கிகள் தெருஓர வியாபாரிகளுக்கு கடன் வழங்காமல் இழுத்தடித்துள்ளன.
இது குறித்து தெருஓர வியாபாரிகள், நகராட்சி அதிகாரிகளிடம் புகார் செய்தனர்.
இதையயடுத்து, கடன் கொடுக்காத வங்கிகள் முன்பு குப்பைகளை கொட்டுமாறு, சுகாதார ஊழியர்களுக்கு நகராட்சி உயர் அதிகாரி உத்தரவிட்டார்.
அவர் ஆணையை ஏற்று, வங்கிகள் முன்பாக சுகாதார ஊழியர்கள் குப்பைகளை கொட்டியுள்ளனர்.
காலையில் வேலைக்கு வந்த வங்கி ஊழியர்கள், இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
நகராட்சி அலுவலரை, சம்மந்தப்பட்ட வங்கி அலுவலர்கள் தொடர்பு கொண்டு, கடனை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இதன் பின்னர் வங்கி வாசலில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளை சுகாதார ஊழியர்கள் அகற்றினர்.
– பா. பாரதி