டெல்லி: ரஷ்யாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ரஷியா செல்கிறார்.
மாஸ்கோவில் நடைபெறும் 3 நாள் மாநாட்டில் கலந்துகொள்ளும் வகையில், ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு இன்று மாஸ்கோ பயணமாகிறது.
எஸ்.சி.ஓ. எனப்படும் ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பில் ரஷ்யா, இந்தியா, சீனா, பாகிஸ்தான், கிர்கிஸ்தான், உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான், கஜகஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன.
3 நாள் நடைபெறும் இம்மாநாட்டில் உறுப்பினராக உள்ள அனைத்து நாட்டு அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர். இதில், இந்தியா, சீனா இடையே உள்ள எல்லைப் பிரசசினை  உள்பட  பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த எஸ்சிஓ கூட்டத்தில் சீன பாதுகாப்பு மந்திரி ஜெனரல் வீ ஃபெங்கும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்சிஓ நிகழ்வின் ஒரு பக்கமாக சிங் மற்றும் சீன பாதுகாப்பு மந்திரி வெய் இடையே இருதரப்பு சந்திப்பு சாத்தியம் குறித்து கேட்கப்பட்டபோது, ​​அத்தகைய திட்டம் எதுவும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் பலநாடுகள் இணைந்து நடத்தும் போர் பயிற்சி  ஆட்டத்திலிருந்து இந்தியா விலகிய சில நாட்களிலேயே பாதுகாப்பு அமைச்சரின் ரஷிய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.