இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா நிர்மலா சீதாராமன், இந்திய ராணுவ வீரரின் தாயின் பாதங்களை தொட்டு வணங்கி மரியாதை செலுத்தினார். டேராடூனில் நடந்த முன்னாள் ராணுவ வீரர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Nirmala_Sitharaman

டேராடூனில் முன்னாள் ராணுவ வீரர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துக் கொண்டார். அப்போது ராணுவ வீரர்களின் தாயின் பாதங்களில் விழுந்து வணங்கிய நிர்மலா சீதாராமன் உரிய மரியாதை செலுத்தினார்.

அதன்பின் பேசிய நிர்மலா சீதாராமன், “ பொய்யாக பரவும் கருத்துக்களை நம்பவம் வேண்டாம். இந்திய வீரர்களின் நேர்மையை தவறாக வழிநடத்த முயற்சிப்பவர்களை புறக்கணிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் ஓய்வு பெற்ற வீரர்களுக்கு ஓய்வூதியம் தவறாமல் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் ஓய்வூதிய திட்டத்தில் கூடுதலாக ரூ.8000 வழங்கப்பட உள்ளது.

கடந்த 60 ஆண்டுகளில் நாட்டிற்காக உயிர்தியாகம் செய்த வீரர்களின் நினைவாக தேசிய போர் வீரர்கள் நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டுள்ளது.