ஸ்ரீநகர்,
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீத்தாராமன், காஷ்மீரில் உள்ள எல்லைக் கோட்பாடு அருகே ஆய்வுகள் மேற்கொண்டார்.
இரண்டு நாள் சுற்றுப்பயணமாக ஜம்முகாஷமீர் சென்றுள்ள அமைச்சர் நிர்மலா அங்கு குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டருகே உள்ள இந்திய நிலைகளை ராணுவ அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
பின்னர் மாநில ஆளுநர் நரேந்திர நாத் ஓராவையும், முதல்வர் மெஹபூபாவையும் சந்தித்து பேசினார்.
இன்று அவர் லடாக் மற்றும் சியாச்சின் பகுதிக்கு செல்ல இருக்கிறார். அங்கு எல்லைக்கோடு அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நமது ராணுவ நிலைகளை பார்வையிடுகிறார்.