கோவா:
கப்பல் மூலம் உலகை சுற்றிவிட்டு மீண்டும் கோவா திரும்பி உள்ள கடற்படை பெண் வீராங்கனைகளை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நேரில் சென்று வரவேற்றார்.
இந்திய கடற்படை கப்பல் கப்பல் (ஐ.எஸ்.எஸ்.வி.) தரினியில் 6 பேரை கொண்ட பெண்கள் அணி கடந்த ஆண்டு கோவாவில் இருந்து உலகம் முழுவதும் சுற்றி வரும் பயணம் மேகொண்டது. அந்த அணியினரை இன்று கோவாவில் உள்ள பனாஜி கப்பற்படை படை தளத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வரவேற்றார்.
இந்த பெண்கள் குழுவினர் கடந்த ஆண்டு செப்டம்பர் 10ந்தேதி கோவாவில் இருந்து புறப்பட்டு உலகம் முழுவதும் சுற்றி வந்த நிலையில், இன்று மீண்டும் கோவாவுக்கு திரும்பி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நிர்மலா சீத்தாராமன், இந்த பெண்கள் செய்த சாதனைக்காக நான் தலைவணங்குகிறேன். இதுபோல நாட்டின் ஒவ்வொரு இளைஞனும்,. இளைஞர்களும் சாதனை புரிய வேண்டும். இது அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும் என்று கூறினார்.