சென்னை:

காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் ஓமர்அப்துல்லா தாடியுடன் காட்சியளிக்கும் படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், அதை காணும் தனது மனது கலங்குகிறது  என்று டிவிட் பதிவிட்டுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப் பட்டு உள்ளது. இந்த நடவடிக்கை கடந்த  ஆண்டு (2019)  ஆகஸ்டு மாதம் 5ந்தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதையொட்டி, அம்மாநில முன்னாள் முதல்வர்கள், முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் ஏராளமா னோரை, காவல்துறையினர், ராணுவம் இணைந்து வீட்டுக்காவலில் அடைத்தனர். இவர்களில் பலர் படிபடிப்பாக விடுவிக்கப்பட்டு விட்ட நிலையில், முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, ஓமர் அப்துல்லா,  மெகபூஃபா முக்தி உள்பட சில தலைவர்கள் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளனர்.  5 மாதங்களை கடந்தும் அவர்கள் விடுவிக்கப்படாமல் இருப்பதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன்பு, ஓமர் அப்துல்லா தாடியுடன் காட்சியளிக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலனது.

எப்போம கிளின் சேவ் முகத்துடன் இளைஞராக காட்சியளிக்கும் ஓமர் அப்துல்லா, தற்போது தாடி மீசையுடன் பரதேசி போன்று காட்சியளிப்பு அரசியல் கட்சியினர் மட்டுமின்றி மக்களிடையேயும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகைப்படத்தை காணும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மட்டுமின்றி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்பட பலர் கண்டனமும், வருத்தமும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓமர் அப்துல்லா படத்தை பார்த்ததில் இருந்த தனது மனது கலக்கமடைவதாக டிவிட் பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில்,

ஓமர் அப்துல்லாவின் இந்தப் படத்தைக் காணும்போது தனது மனது  ஆழ்ந்த கலக்கமடைகிறது.  ஃபாரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்பட   பிற காஷ்மீர் தலைவர்கள் விசாரணை அல்லது உரிய செயல்முறை இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இது மனதை நெருடச் செய்கிறது.

யூனியன் அரசு உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்து பள்ளத்தாக்கில் இயல்புநிலையை மீட்டெடுக்க வேண்டும், என்று பதிவிட்டுள்ளார்.