சென்னை: கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எஸ்எம் கிருஷ்ணா மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார்.
92வயதாகும் முன்னாள் முதல்வர் எஸ்எம்கிருஷ்ணா, வயது முதிர்வு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் வீட்டிலிருந்தே சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில், இன்று அதிகாலை அவர் காலமானார். இவரது இயர் பெயர் சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா. இவர் கடந்த 1989 முதல் 1993 வரை கர்நாடக சட்டப்பேரவையின் சபாநாயகராகவும், 1971 முதல் 2014ம் ஆண்டு வரை பல முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்துள்ளார், கடந்த 1999 முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா முதல்-மந்திரியாக பதவி வகித்தவர் எஸ்.எம். கிருஷ்ணா. இதனைத்தொடர்ந்து 2004 முதல் 2008 ம் ஆண்டு வரை மராட்டிய மாநிலத்தின் கவர்னராவும் , 2009 முதல் 2012-ம் ஆண்டு வரை வெளியுறவுத்துறை மந்திரியாவும் பதவி வகித்தவர்.
பின்னர் கட்சி தலைமையிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணாக, காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இதையடுத்து, அவரது ஆறு தசாப்த கால அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமகன் விருதான பத்ம விபூஷன் விருதை மத்தியஅரசு வழங்கியது.
எஸ்எம்.கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திரு. எஸ்.எம். கிருஷ்ணா காரு, அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளதுடன், அவர், தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மற்றும் இந்திய அரசியலில் ஒரு தலைசிறந்தவர்.
கர்நாடக முதல்வராக, அவர் மாநிலத்தை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை நோக்கி வழிநடத்தினார், மேலும் இந்தியாவின் வெளியுறவு அமைச்சராக, அவர் அரசியல் மற்றும் கருணையுடன் நமது உலகளாவிய நிலையை பலப்படுத்தினார்.
திரு. கிருஷ்ணா 1960களின் பிற்பகுதியிலிருந்து தலைவருடன் நெருங்கிய பந்தத்தைப் பகிர்ந்து கொண்டார், பரஸ்பர மரியாதை மற்றும் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் முற்போக்கான நிர்வாகத்திற்கான பகிரப்பட்ட பார்வை ஆகியவற்றைக் கட்டியெழுப்பினார். அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் வரும் தலைமுறைகளுக்கு நினைவுகூரப்படும்.
இவ்வாறு கூறியுள்ளார்.