புதுடெல்லி:
க்களுக்குத் தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வை கொடுத்துவிட்டு, முதலாளித்துவ நண்பர்களுக்கு 6 விமான நிலையங்களை மத்திய அரசு பரிசாக வழங்குகிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா தெரிவித்துள்ளார்.

பீஹார் சட்டசபை தேர்தலுக்கான, இரண்டாவது கட்ட ஓட்டுப்பதிவு  நடக்கிறது. இந்நிலையில், விலைவாசி உயர்வு மற்றும் லக்னோ விமான நிலைய பராமரிப்பை, அதானி குழுமத்துக்கு மத்திய அரசு வழங்கியுள்ள செய்தியைச் சுட்டிக்காட்டி பிரியங்கா விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டதாவது:

மக்களுக்கு எப்போதும் இல்லாத வகையில், தீபாவளிப் பரிசாக விலைவாசி உயர்வு மற்றும் பணவீக்கத்தை கொடுத்துள்ள, பா.ஜ., அரசு, தன்னுடைய முதலாளித்துவ நண்பர்களுக்கு, தீபாவளிப் பரிசாக 6 விமான நிலையங்களைக் கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.