சென்னை:
காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டது வருத்தம் அளிக்கிறது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காவிரி மேல்முறையீட்டு வழக்கில், இன்று தீர்ப்பு அளித்துள்ள உச்சநீதி மன்றம், தமிழகத்துக்கான காவிரை நீரை குறைத்துள்ளது.
ஏற்கனவே உத்தரவிடப்பட்ட 192 டிஎம்சியில் இருந்து 177.25 டிஎம்சி நீராக குறைத்து உச்சநீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. இது தமிழக விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்களும், விவசாயிகளும் கடும் கண்டமும், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இதுகுறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த அவர், காவிரி நீருக்கு எந்த மாநிலமும் உரிமை கொண்டாட முடியாது என சுப்ரீம் கோர்ட் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது என்றும், அதே நேரத்தில் காவிரியில் தமிழகத்துக்கான தண்ணீர் குறைக்கப்பட்டி ருப்பது வருத்தம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.