சென்னை: டெல்லி குடியரசுத் தினத்தில் அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையிலேயே பங்கேற்கின்றன  என முன்னாள் முதலமைச்சர் எடப்பாடிக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.

2025 ஜனவரி 26ந்தேதி அன்று டெல்லியில்,  குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும் அதற்கு திமுக அரசின் திறனற்ற நிர்வாகமே காரணம் என்றும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்திருந்தார். இதற்கு  தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இது வதந்தி என நிராகரித்ததுடன் வதந்திகளை நம்பவேண்டாம் என்று குறிப்பிட்டு அது தொடர்பாக விளக்கமும் அளித்துள்ளது.

இந்த நிலையில், முன்னாள் முதல்வர், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கு, அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.

டெல்லி குடியரசுத் தினத்தில் மாநிலம் சார்பாக பங்கேற்கும் அலங்கார ஊர்திகள் சுழற்றி முறையிலேயே பங்கேற்கின்றன எதையும் அறிந்துக்கொள்ளாமல் அறிக்கை கொடுக்கிறார் எடப்பாடி பழனிசாமி  என விமர்சனம் செய்துள்ளார்.