மும்பை:
அனில் அம்பானியின் ஆர் காம் நிறுவனத்தில் ரிலையனஸ் டிடிஹெச் சேவை அடுத்த மாதம் முதல் இந்தியா முழுவதும் மூடப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
அடுத்த மாதத்துடன் அந்நிறுவனத்திற்கான உரிமம் காலாவதி ஆகிறது. இந்நிலையில் டிடிஹெச் சேவையை நவம்பர் 18ம் தேதியுடன் மூடும் அறிவிப்பை நாளிதழில் அந்நிறுவனம் விளம்பரம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் டிஜிட்டல் சேவையும், சன் நெட்ஒர்க் சேவையும் இணக்கும் முயற்சி தோல்வி அடை ந்ததை தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதர நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியும் நல்ல விதமாக அமையவில்லை. கடந்த மார்ச் வரையிலான ஆர் காம் நிறுவனத்தின் கடன் 443.45 பில்லியன் ரூபாய் என்ற நிலையில் இருந்தது.
இது ஆர் காம் நிறுவனத்திற்கு மற்றொரு பின்னடைவாக அமைந்துள்ளது. அதேபோல் இந்நிறுவனம் தனது செல்போன் சேவையை ஏர்செல்லுடன் இணைத்து நிறுவனத்தின் கடனை 250 பில்லியன் ரூபாயாக குறைக்கவும் முயற்சி செய்து வருகிறது.