சென்னை: கடன் மோசடி புகாரில் சிக்கியுள்ள சென்னையைச் சேர்ந்த தனியார் கடன் நிறுவனத்துக்கு சொந்தமான 13 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் இயங்கி வந்த தனியார் நிறுவனமான Oceanic edible international limited கடந்த 2021 ஆம் ஆண்டு வங்கியில் 225 கோடி ரூபாய் கடன் மோசடி செய்த விவகாரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த நிறுவன தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. மொத்தம் 104 கோடி ரூபாய் கடன் பெற்று அதை முறைகேடாக பயன்படுத்திய விவகாரத்தில், 225 கோடி ரூபாய் வரை கடன் வாங்கி வங்கிகளுக்கு இழப்பீடு ஏற்படுத்தியாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் என்பது 24 நவம்பர் 1994 அன்று ஒரு பொது நிறுவனமாகும். இது அரசு சாரா நிறுவனமாக வகைப்படுத்தப்பட்டு, சென்னையில் உள்ள நிறுவனங்களின் பதிவாளரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனம் ரூ. 300,000,000 மற்றும் அதன் செலுத்தப்பட்ட மூலதனம் ரூ. 300,000,000. இது மீன்பிடித்தல், மீன் குஞ்சு பொரிப்பகங்கள் மற்றும் மீன் பண்ணைகளின் செயல்பாடு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளது; மீன்பிடித்தலுடன் தொடர்புடைய சேவை நடவடிக்கைகள்

ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் வருடாந்திர பொதுக் கூட்டம் (ஏஜிஎம்) கடைசியாக 29 செப்டம்பர் 2016 அன்று நடைபெற்றது மற்றும் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தின் (எம்சிஏ) பதிவுகளின்படி, அதன் இருப்புநிலை கடைசியாக 31 மார்ச் 2016 அன்று தாக்கல் செய்யப்பட்டது.

ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்டின் இயக்குநர்கள் ஆரோக்கியசாமி டொமினிக் சாவியோ, விமல்லா ஜோசப், ஜோசப் ராஜ் ஆரோக்கியசாமி மற்றும் ஆரோக்கியசாமி ஜேம்ஸ் வால்டர். ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட் நிறுவனத்தின் கார்ப்பரேட் அடையாள எண் (CIN) U05001TN1994PLC029335 மற்றும் அதன் பதிவு எண் 29335. இதன் மின்னஞ்சல் முகவரி oceanic@oceanicedible.com மற்றும் அதன் பதிவு முகவரி எண்.29 Zacaria Colony, TN40 IN40

கடன் மோசடி புகார் தொடர்பாக, ஓசியானிக் எடிபிள்ஸ் இன்டர்நேஷனல் லிமிடெட்டின்  என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குனர்கள் ஜோசப் ராஜ் ஆரோக்கியசாமி, விமலா ஜோசப் ஆரோக்கியசாமி, ஜேம்ஸ் வால்டர் ஆரோக்கியசாமி, டாமினிக் சாவியோ ஆகியோர் மீது ஏற்கனவே சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த நிலையில், முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறையும் வழக்கு பதிவு செய்துள்ளது.

 சிபிஐ வழக்கை அடிப்படையாக வைத்து, கடன் வாங்கிய பணத்தை மத்திய அரசு அனுமதியின்றி சட்டவிரோத பண பரிமாற்றம் செய்துள்ளதாகவும் வெளிநாட்டில் முதலீடு செய்துள்ளதாகவும் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு சொந்தமான சென்னை மேற்கு தாம்பரம், வேளச்சேரி, சோழிங்கநல்லூர், அமைந்தகரை, கோடம்பாக்கம் உள்ளிட்ட 13 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.