மெக்சிகோ: 2020ம் ஆண்டு மார்ச் முதல் மெக்சிகோ நாட்டில் 9 லட்சம் பேர் இறந்துள்ளனர்.
கடந்தாண்டு மெக்சிகோ நாட்டில் ஏற்பட்ட இறப்புகள் அதற்கு முந்தைய ஆண்டுகளை விட52 சதவீதம் அதிகமாகும். இன்னும் சொல்ல போனால் கொரோனா காலத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட அதிகமாகும். அதிகாரப்பூர்வ தகவல்கள் படி, 2020ம் ஆண்டு மார்ச் முதல் இப்போது வரை 9,77,081 இறப்புகள் பதிவாகி உள்ளன.
ஆனால் இதுவே 2015 முதல் 2019ம் ஆண்டு காலகட்டம் வரை பதிவான 641556 இறப்புகளை விட அதிகமாகும். தொற்றுநோய் தொடங்கிய காலத்தில் இருந்து 2 மில்லியன் தொற்றுகள் பதிவாகி, அதில் கொரோனா காலத்தில் 1,80,000 இறப்புகள் பதிவாகி உள்ளதாக மெக்சிகோ கூறி உள்ளது. இது அமெரிக்காவில் உள்ளதை விட அதிகமாகும்.
உலகில் நிகழ்ந்த இறப்புகளை பதிவு செய்த மெக்சிகோ புள்ளியியல் நிபுணர் யூஜெனியோ சான்செஸ் இந்த விவரங்களை வெளியிட்டு உள்ளார். பொருளாதார நிபுணர் ஏரியல் கார்லின்ஸ்கி மற்றும் ரஷ்ய ஆராய்ச்சியாளர் டிமிட்ரி கோபக் ஆகியோர் இங்கிலாந்துடன் ஒப்பிடும் போது மெக்சிகோவின் எண்ணிக்கை 75 சதவீதம் என்று கூறி உள்ளனர்.
பெரு உலகின் மிக மோசமான பாதிப்புக்குள்ளான நாடாகவும், மேலும் ஈக்வடார் மற்றும் பொலிவியா நாடுகள் தொற்றுநோய்களின் போது அதிகமான இறப்புகளால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2020ம் ஆண்டில் அதிக இறப்புகள் கொரோனா மூலமாக நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பதிவாகி உள்ளது என்பதை நாங்கள் அனைவரும் ஒப்புக் கொள்கிறோம் என்றும் கூறி உள்ளனர்.
மெக்ஸிகோ நாட்டில் 2020ம் ஆண்டு மார்ச் முதல் ஜூன் வரை நாடு தழுவிய லாக்டவுன் அறிவிக்கப்பட்டது. ஆனால் சிறைச்சாலையில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கோ, பயணங்களுக்கோ தடை விதிக்கவில்லை. அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என்பதையும் அந்நாடு கட்டாயம் ஆக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.