மும்பை
மும்பை காவல்துறை உதவி எண்ணுக்கு பிரதம்ர்மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து குறும் செய்தி வந்துள்ளது.
நேற்று வாட்ஸ்ஆப் மூலம் மும்பை காவல்துரை உதவி எண்ணிற்கு குறும் செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த செய்தியில்ல், 2 ஐ.எஸ்.ஐ. பயங்கரவாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், பிரதமர் மோடியை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
காவல்துரையினர் உடனடியாக குறுஞ்செய்தி அனுப்பியவரின் இருப்பிடத்தை கண்டறியும் பணியில் ஈடுபட்டு அந்த குறுஞ்செய்தி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் இருந்து அனுப்பப்பட்டிருந்தது கண்டுபிடித்தன்ர். சம்பந்தப்பட்ட நபரை பிடிப்பதற்காக தனிப்படை காவல்துறையினர் ராஜஸ்தானுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மோடிக்கு கொலை மிரட்டல் குறுஞ்செய்தியை அனுப்பியவர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கலாம், அல்லது மதுபோதையில் இருந்து இருக்கலாம் என சந்தேகிப்பதாக காவல்துறையின தெரிவித்துள்ளனர்.