லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 558-ஐ எட்டியுள்ளது. இதில் 50 குழந்தைகள் மற்றும் 94 பெண்கள் உயிரிழந்துள்ளனர், 1,835 பேர் காயமடைந்துள்ளனர்
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் என்றும் மருத்துவமனைகள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களும் குறிவைக்கப்படுகின்றன என்று அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஃபிராஸ் அபியாட் தெரிவித்துள்ளார்.
திங்களன்று இஸ்ரேலிய தாக்குதல்களில் குறைந்தது 492 பேர் கொல்லப்பட்டனர், இது 2006 இஸ்ரேல்-ஹெஸ்புல்லா போருக்குப் பிறகு நாட்டிற்கு மிக மோசமான நாள் என்று லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக எச்சரித்த லெபனான் பாதுகாப்பு உயரதிகாரி இஸ்ரேலின் இந்த தாக்குதலில் இருந்து வடக்கு எல்லையை பாதுகாக்க ஹெஸ்பொல்லா அமைப்புக்கு உத்தரவிட்டுள்ளது.
இதனால், மத்திய கிழக்கு நாடுகளான இஸ்ரேல் – லெபனான் இடையே முழு அளவிலான போர் ஏற்படக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அதேவேளையில், இந்தப் போரில் அமெரிக்கா தனது படைபலத்தை இஸ்ரேலுக்கு ஆதரவாக இறக்ககூடும் என்ற நிலையில் லெபனான் இதுவரை தனது ராணுவ பலத்தையோ ஆயுத பலத்தையோ முழுஅளவில் ஈடுபடுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த விவகாரத்தில் நடுநிலை நாடுகளின் தலையீடு மட்டுமே மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கும் பதற்றத்தை தணிக்க உதவும் என்று கூறப்படுகிறது.