கொழும்பு:

டந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகையின்போது, இலங்கையிர் நடைபெற்ற  தேவாலய வெடிகுண்டு தாக்குதல்: பலி எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இதுமேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பு காரணமாக சந்தேகத்தின் பேரில்  58 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தகர்க்கப்பட்டன. இது உலகத்தையே அதிர வைத்துள்ளது. இந்த கொடுமையான செயலுக்கு ஐஎஸ் பயங்கரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர்.

இந்த கொடூர தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 359 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில்  45 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளனர்..

இந்த  கொடூர தாக்குதல் தொடர்பாக ஏற்கனவே  40 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இறந்த குழந்தைகளின் ஆத்மா சாந்தியடையும் வகையில், அவர்கள் படித்த பள்ளிகளில் மெழுகு வர்த்தி ஏற்றி மாணவ மாணவிகள் பிரார்த்தனை செய்தனர்.

மேலும் பயங்கரவாதிகள் சிலர் வெடிகுண்டு வாகனத்துடன் இலங்கையில் பதுக்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து,. வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்த  பிரதமர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார்.