பியோங்யாங்

டகொரியாவில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் 1000 பேர் உயிரிழந்துள்ளதால் 30 அரசு அதிகாரிகளுக்கு மரண தண்டன அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

கடந்த ஜூலை மாதம் வடகொரியாவில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் 4,100 வீடுகள், 7,410 விவசாய நிலங்கள், அரசு கட்டடங்கள், சாலைகள் மற்றும் ரெயில்வே லைன்கள் என அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கின. இதில் 1000 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக வடகொரியாவின் வடமேற்கு பகுதிகளில் உள்ள நகரங்களின் அதிக பாதிப்புகள் நிகழ்ந்துள்ளன.

பாதிக்கப்பட்ட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்ட அதிபர் கிம் ஜாங் உன் அவ்விடங்களை மீண்டும் கட்டியெழுப்ப பல மாதங்கள் ஆகும் என்று தெரிவித்தார். வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட 15,400 பேருக்கு தலைநகர் பியோங்யாங்கில் அரசாங்கம் தற்காலிக தங்குமிடம் வழங்கியது.

வெள்ள பாதிப்புகளைத் தடுக்கத் தவறிய அதிகாரிகளைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதிபர் கிம் உத்தரவிட்டிருந்தார். அதிபரின் உத்தரவுப்படி கடந்த மாத இறுதியில் ஊழல் மற்றும் கடமை தவறிய அரசு அதிகாரிகளாக 30 பேர் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.