திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் நிபா வைரஸ் காய்ச்சல் பரவியதால் ஏராளமான பொது மக்கள் பாதிக்கப்பட்டனர். இதுவரை நிபா 2 நர்சுகள் உள்பட 12 பேர் பலியாகி உள்ளனர். பலர் காய்ச்சல் அறிகுறியுடன் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோழிக்கோடு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கல்யாணி (வயது 62) என்பவர் இன்று இறந்தார். இதன் மூலம் நிபா காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
வவ்வால்கள் மூலம் பரவும் இந்த காய்ச்சலை கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் இருந்து மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.