சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்த புகார்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னை உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இந்த நிலையில்,  குமரிக்கடல் பகுதியில் நிலவும்குறைந்த காற்றத்த தாழ்வு மண்டலம் மேற்கு நோக்கி அடுத்த 24மணி நேரத்தில் தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிக்கு நகரக்கூடும் என்பதால்,  இன்றும் நாளையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்று கூறி  ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே சென்னை மற்றும் அண்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏராளமான ஏரிகள் நிரம்பி உள்ள நிலையில் மேலும் பெய்யும் கனமழை காரணமாக ஏரிகளில் நீர் நிரம்பி, திறந்துவிடப்படும் அபாயம் உள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துவரும் சென்னை மாநகராட்சி, அதற்கான அவசர தொலைபேசி எண்களையும் வெளியிட்டு உள்ளது.

சென்னையில் மழை வெள்ள பாதிப்பு குறித்த புகார்கள் குறித்து தொடர்பு கொள்ள 04425619206,  04425619207, 04425619208 ஆகிய  தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், வெள்ள பாதிப்பு குறித்து புகாரளிக்க சென்னை மாநகராட்சி 3 தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது,

[youtube-feed feed=1]