
சிட்னி: ஆஸ்திரேலிய ‘ஏ’ அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் பகலிரவு டெஸ்ட் பயிற்சி ஆட்டத்தில், இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில், இந்திய அணி மொத்தமாக 472 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
இந்திய அணியின் ரிஷப் பண்ட், 73 பந்துகளில் 103 ரன்களை விளாசினார். அவர், ஜேக் வில்டெர்மத் வீசிய ஒரு ஓவரில், தொடர்ச்சியாக 4, 4, 6, 4, 4 என்று விளாசி எதிரணியை மிரளச் செய்தார். ஒட்டுமொத்தமாக, தனது இன்னிங்ஸில் அவர் 6 சிக்ஸர்கள் மற்றும் 9 பவுண்டரிகளை விளாசினார்.
மற்றொருபுறம், அனுமன் விஹாரி 104 ரன்களை வெளுத்தார். ஷப்மன் கில், மொத்தம் 78 பந்துகளை சந்தித்து 65 ரன்களை அடித்தார். இதில் 10 பவுண்டரிகள் அடக்கம்.
ஒட்டுமொத்தத்தில், ஆஸ்திரேலிய பவுலர்களை, இந்திய இளம் பேட்ஸ்மென்கள் பிரித்து மேய்ந்துவிட்டனர். ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்ஸில் வெறும் 108 ரன்களுக்கு சுருண்டது. எனவே, முதல் இன்னிங்ஸில் 86 ரன்கள் முன்னிலையுடன் ஆடத்துவங்கிய இந்திய அணி, இரண்டாவது இன்னிங்ஸில் 386 ரன்கள் முன்னிலையுடன் மொத்தமாக, 2வது நாள் ஆட்ட முடிவில் 472 ரன்கள் முன்னிலைப் பெற்றுள்ளது.
[youtube-feed feed=1]