துபாய்: ஐசிசி வெளியிட்ட டி-20 போட்டிக்கான பேட்ஸ்மென்கள் தரவரிசைப் பட்டியலில், இங்கிலாந்தின் டேவிட் மாலன் முதலிடம் பெற்றுள்ளார்.
மொத்தம் 915 புள்ளிகளைப் பெற்ற அவர், ஐசிசி தரவரிசையில், 900 புள்ளிகளைக் கடந்த முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர், ஆரோன் பின்ச் 900 புள்ளிகள் பெற்றதே அதிகளவாக இருந்தது.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில், தொடர் நாயகன் விருதை வென்றார் மாலன்.
இரண்டாமிடத்தில், பாகிஸ்தானின் பாபர் ஆசம்(871 புள்ளிகள்) மற்றும் மூன்றாமிடத்தில் ஆஸ்திரேலியாவின் ஆரோன் பின்ச்(835 புள்ளிகள்) பெற்றுள்ளனர்.
நான்காமிடத்தில், 824 புள்ளிகளுடன் இருப்பவர், இந்தியாவின் கேஎல் ராகுல். விராத் கோலி, 673 புள்ளிகளுடன் ஒன்பதாம் இடத்தில் உள்ளார்.
பந்துவீச்சாளர் பட்டியலில், ஆப்கானிஸ்தானின் ரஷித் கான்(736 புள்ளிகள்) பெற்று முதலிடத்தில் நீடிக்கிறார்.