கான்ஃபெர்ரோ

கொரோனா பேரழிவிலிருந்து மக்களை பாதுகாக்க தங்கள் உயிரையே ஒப்புவித்து சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்து,  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது தலைமுடியை மொட்டை அடித்துக் கொண்டுள்ளார்.

இரவு, பகல் பாராமல் கொரோனாத்  தொற்றுள்ளோருக்கு   சேவையாற்றி வரும் மருத்துவர்களுக்கு உலகெங்கும் பலரும் சமூக வலைதளங்களில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

அவ்வகையில்  அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர், மருத்துவர்களுக்கு தனது நன்றியை தெரிவிக்கும் விதமாக தனது தலைமுடியை டிரிம்மர் மூலம் ஷேவ் செய்து கொண்டார்.  

இதுகுறித்து அவர் வெளியிட்ட வீடியோ பதிவில், பிறரை அவ்வாறு செய்வீர்களா எனவும் கேட்டுள்ளார். வார்னரின்  இவ்வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி நெட்டிசன்களின் வரவேற்பை பெற்று வருகிறது.

இதற்கு முன்பாக பிரதமர் மோடி கூறியதற்கு இணங்க,  மருத்துவர்கள் – செவிலியர்கள் –  தூய்மைப் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக நாட்டு மக்கள் கைதட்டி நன்றியைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது…