திருப்பதி:
திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய பஸ் டிக்கெட்டுடன் தரிசன டோக்கன் வினியோகம் செய்யபட்டு வருகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கொரோனா தொற்றுக்கு பிறகு சாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் எண்ணிக்கை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து திருப்பதியில் தரிசனத்திற்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக பஸ் டிக்கெட்டுடன் தினமும் ரூ.300 தரிசன டிக்கெட் விநியோகம் மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்படி, தினமும் இந்த முறையில் 1000 டிக்கெட்டுகள் வழங்கப்படுகிறது. சென்னை, வேலூர், பெங்களூர், ஹைதராபாத், விஜயவாடா உள்ளிட்ட இடங்களில் இருந்து திருமலைக்கு செல்லும் பஸ்களில் இந்த முறை மீண்டும் தொடங்கியுள்ளது.
Patrikai.com official YouTube Channel