சென்னை

த்தார் நாடு பெயர் சூட்டியுள்ள டானா புயல் வங்கக் கடலில் உருவாக உள்ளது.

தமிழகத்தில் கடந்த 15-ந் தேதி முதல் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மிக கன மழை பெய்தது. அப்போது வங்கக்கடலில் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமும், வட மாவட்டங்களில் மேலடுக்கு சுழற்சியும் நிலவியதால் இந்த மழை பெய்தது. சென்னைக்கு அருகே  வரும் போது மேலும் மழை இருக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அது தவறாகி போனது.

இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) தாழ்வு மண்டலமாகவும், நாளை மறுதினம் (புதன்கிழமை) புயலாகவும் கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் வலுவடைய உள்ளது எனவும் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கத்தார் நாடு இந்த புயலுக்கு ‘டானா’ என்று பெயரிடப்படுள்ளது.   டானா புயலினால் தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு இல்லை  எனக் கூறப்பட்டுள்ளது.  வங்கக்கடலில் உருவாகும் இந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, ஒடிசா-வங்காள தேசம் இடையே மேற்கு வங்காளத்தில் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புயலால் ஒடிசா, மேற்கு வங்காளம் மாநிலங்களில் மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.