திருவனந்தபுரம்
திருவனந்தபுரம் விமானநிலையத்தில் பறவைகளை கட்டுப்படுத்த தினமும் ரூ. 324 லட்சத்துக்கு பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.

கேரள தலைநகர்திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து புறப்படும் மற்றும் தரை இறங்கும் விமானங்களுக்கு பறவைகள் பெரும் தொல்லையாக உள்ளன. எனவே இந்த பறவைகளை விரட்ட விமானங்கள் புறப்படும் போதும் தரை இறங்கும்போதும் பட்டாசுகள் வெடிக்கப்படுகின்றன.
இதற்கு 12 இடங்களில் 30 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பறவைகளை விரட்ட ராக்கெட்டுகள், குண்டுகள் மற்றும் மேலே சென்று மூன்றாக பிரிந்து வெடிக்கும் ஸ்கை ஷாட் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு நாள் ஒன்றுக்கு ரூ.3.24 லட்சம் செலவாகும்.
அதாவதுஆண்டுக்கு 11 கோடியே 82 லட்சத்து 60 ஆயிரம் செலவாகிறது. மேலும் 2 ஷிப்டுகளில் மொத்தம் 30 ஊழியர்கள் பட்டாசு வெடிப்பதற்காக நியமிக்கப்பட்டு இவர்கள் ஒவ்வொருவருக்கும் குறைந்தது 24 ஆயிரம் ரூபாய் ஊதியம் வழங்கப்படுவதால் ஊழியர்களுக்கு மட்டுமே ஒரு மாத சம்பளத்திற்கு ஆகும் செலவு ரூ.7.20 லட்சம் ஆகிறது.
[youtube-feed feed=1]