இந்தியாவில் தினசரி 87 பெண்கள் பாலியல் பலாத்காரத்துக்கு  ஆளாகும் கொடுமை..

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ’தேசிய குற்றங்கள் ஆவண துறை’ (NCRB) என்ற அமைப்பு ஆண்டுதோறும் இந்தியாவில் நடைபெறும் குற்றங்கள் குறித்துக் கணக்கெடுத்து வருகிறது.

கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்த குற்றங்கள் குறித்து 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த அமைப்பு கணக்கெடுப்பு நடத்தி அதனை ஆய்வு செய்து ‘’ CRIMES IN INDIA- 2019’’ என்ற தலைப்பில்  அறிக்கை ஒன்றை ( டேடா) வெளியிட்டுள்ளது.

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவதாக இந்த அறிக்கையில் திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019 ஆண்டில், இந்தியாவில் தினம்தோறும் 87 பெண்கள் சராசரியாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு 32 ஆயிரத்து 559 பெண்களும், அடுத்த 2018 ஆம் ஆண்டு  33 ஆயிரத்து 356 பெண்களும் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது.

முந்தைய ஆண்டை விட, கடந்த ஆண்டு ( 2019) பாலியல் சம்பவங்கள் 7 சதவீதம் அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

-பா.பாரதி

[youtube-feed feed=1]