மும்பை
பிர்பல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
கடந்த 1976-ம் ஆண்டு வெளியான ‘மிருகயா’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி அறிமுகமானார். அவருக்கு இந்த படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. அதாவது மிதுன் சக்கரவர்த்தி தனது அறிமுக படத்திலேயே தேசிய விருது வென்ற நடிகர் என்ற பெருமையை பெற்றார்.
பிறகு 1982-ம் ஆண்டு வெளியான ‘டிஸ்கோ டான்ஸர்’ படத்தின் மூலம் இந்தியா முழுவதும் புகழ் பெற்றார்.’தஹதர் கதா’ மற்றும் ‘சுவாமி விவேகானந்தர்’ ஆகிய படங்களில் நடித்ததற்காக மேலும் இரண்டு தேசிய விருதுகளை மிதுன் வென்றார். இவர், ‘யாகாவாராயினும் நா காக்க’ என்னும் தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.
தற்போது மிதுன் சக்கரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே விருது அளிப்பட உள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மிதுனுக்கு அடுத்த மாதம் 8-ம் தேதி நடைபெறும் 70 வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் இந்த விருது வழங்கப்பட உள்ளது.