சென்னை: 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. 5 மாதங்களுக் கான நிலுவைத் தொகையும் சேர்த்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 46 சதவீதமாக உள்ள அகவிலைப்படியை 2024 ஜன.1-ம் தேதி முதல் 50 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும். இந்த அகவிலைப்படி உயர்வால், சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இதனால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு ரூபாய்.2587.91 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும் என்று கடந்த மார்ச் மாதம் 12ந்தேதி தமிழக அரசு அறிவித்தது. இந்த நிலையில், தற்போது மேலும் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு உள்ளது.
இநத் நிலையில், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உயர்த்தியுள்ளது. 5 மாதங்களுக்கான நிலுவைத் தொகையும் சேர்த்து தரப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதன்படி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள, பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களின் அகவிலைப்படி ஏஐசிபிஐ என்ற குறியீடு மூலம்தான் கணக்கீடு செய்யப்படுகிறது. இந்த புள்ளிகள் தொடர்ந்து உயர்ந்தால் அதன் சராசரியை வைத்து அகவிலைப்படி உயர்வு கணக்கீடு செய்யப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை குறைந்து வந்த இந்த புள்ளிகள் தற்போது வேகமாக உயர தொடங்கி உள்ளது. இந்த குறியீடு ஜனவரியில் 132.8 என்ற அளவில் இருந்தது. அதன்பின் ஏற்ற இறக்கமாக புள்ளிகள் சென்று கொண்டு இருந்தன நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து புள்ளிகள் மீண்டும் வேகமாக உயர தொடங்கி உள்ளன. முன்னதாக கடந்த மார்ச் மாதம் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டது. அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு தற்போது வழங்கப்படும் அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த அகவிலைப்படி உயர்வு கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. இதன் மூலமாக மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 46 சதவிகிதத்திலிருந்து 50 சதவிகிதமாக உயரும் என்றும் இந்த அறிவிப்பால் மாநில அரசுக்கு 2 ஆயிரத்து 846 கோடியே 16 லட்ச ரூபாய் கூடுதல் செலவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் இந்த அகவிலைப்படி உயர்வின் மூலம் சுமார் 16 லட்சம் அரசு ஊழியர்கள் பயன்பெற உள்ளனர். ஜனவரி முதல் மே வரையிலான அகவிலைப்படி நிலுவைத் தொகை மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மாநில அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம், அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அதிரடி அறிவிப்பால் ஊழியர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 1.1.2024 முதல் 9 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாநில அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம், அடிப்படை ஊதியம் மற்றும் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களுக்கான அகவிலைப்படி நிலுவைத் தொகை நடைமுறையில் உள்ள, பணமில்லா பரிவர்த்தனை முறையான மின்னணு தீர்வு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு அனைத்து அரசு ஊழியர்களுக்கும் கிடையாது என்பதும், 2016-ஆம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் வாங்கும் அரசு ஊழியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது.