சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகிறது தனுஷின் D43 . இது வரை டி43 என்று குறிப்பிடப்பட்ட இந்த படத்திற்கு தற்போது ‘மாறன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

க்ரைம் திரில்லரான இந்த படத்தில் தனுஷ் பத்திரிகையாளர் ரோலில் நடிக்கிறார். இப்படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இதில் மகேந்திரன் எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிப்பது போல் தெரிகிறது. சமுத்திரகனி, ஸ்மிருதி வெங்கட் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

இந்தப் படத்துக்குக் கூடுதல் திரைக்கதை மற்றும் வசனத்துக்கான பொறுப்பைப் பாடலாசிரியர் விவேக் ஏற்றுள்ளார். இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணிபுரிந்து வருகிறார்.

தனுஷ் இன்று தனது 38-வது பிறந்த நாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், சத்ய ஜோதி ஃபிலிம்ஸ், D43 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் டைட்டிலையும் வெளியிட்டுள்ளது.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தனுஷ், ஒரு கையில் பேனாவைப் பிடித்துக் கொண்டு, மற்றொரு கையில் ஒரு நபரின் தலையை ஒரு கண்ணாடி மேசையில் வைத்து அழுத்தும்படியாக உள்ளது. அந்த நபர் கையில் துப்பாக்கியை வைத்திருப்பதையும் காண முடிகிறது. சிதறிய கண்ணாடி துண்டுகளின் நான்கு பிரதிபலிப்புகளில், அவர் நான்கு வெவ்வேறு பாவனைகளில் காணப்படுகிறார்.