‘கர்ணன்’, ‘ஜகமே தந்திரம்’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கவுள்ள படம் ‘டி43’. முன்னணி தயாரிப்பு நிறுவனமான சத்யஜோதி ஃபிலிம்ஸ் இப்படத்தினைத் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். விவேக் பாடல்கள் எழுதுகிறார்.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43 வது படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருவதாக சத்யஜோதி பிலிம்ஸ் தெரிவித்துள்ளது. அத்துடன் தனுஷும், கார்த்திக் நரேனும் இருக்கும் ஷுட்டிங் ஸ்பாட் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர்.
இதுவொரு த்ரில்லர் திரைப்படம். விரைவில் படப்பிடிப்பை முடித்து செப்டம்பரில் படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர்.
#D43 final schedule progressing at Hyderabad.@dhanushkraja @karthicknaren_M pic.twitter.com/PvLGuWEgy4
— Sathya Jyothi Films (@SathyaJyothi) July 10, 2021