டில்லி:

ந்திய ரெயில்வேயில் பணிக்காலத்தின்போது ரெயில்வே  டி பிரிவு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை வழங்க  கல்வி தகுதி தேவையில்லை என்ற புதிய விதியை இந்தியன் ரெயில்வே அறிவித்து உள்ளது.

ரெயில்வேயில், டி பிரிவு உழியர்களான  ஹெல்பர், மருத்துவ உதவியாளர், பாயின்மேன், போர்ட்ர், டிராக் பராமரிப்பாளர்,  பாதுகாவலர் போன்றவர்கள் பணிக்காலத்தில்  மரணமடைந்தாலோ அல்லது நோய் காரணமாக ஓய்வு பெற்றாலோ, வாரிசுதாரரான அவரது மனைவிக்கு  வேலை வழங்குவதில் இனி கல்வித் தகுதி பின்பற்றப்படமாட்டாது என  ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே இதுபோன்ற வேலைகளுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதியாக  10–ம் வகுப்பு வரை படித்து இருக்க வேண்டும் என்று நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தற்போது அதை விலக்கி உள்ளது ரெயில்வே.

இதுதொடர்பாக ரெயில்வே வாரியம் அனைத்து கோட்டங்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.