சென்னை: பெரும் அச்சத்தை ஏற்படுத்திய மொன்தா புயல், தமிழ்நாட்டை தவிர்த்து ஆந்திர கடற்பகுதியில் நள்ளிரவு கரையை கடந்தது. அப்போது சுமார் 110 கி.மீ வேகத்தில் சூறாவளி வீசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சுமார் 2 மணி நேரமாக பலத்த காற்றுடன் கரையை கடந்த மொன்தா புயல் காரணமாக, கடலோரப் பகுதிகளில் மின் கம்பங்கள், ராட்சத மரங்கள் வேரோடு சாய்துள்ளன. சில பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மொன் புயலுக்கு ஒருவர் பலியானதாகவும் கூறப்படுகிறது.

வங்கக் கடலில் உருவான ‘மொன்தா‘ புயல் காரணமாக கடந்த 3 நாட்களாக சென்னை உள்பட பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்தது. இறுதியில் மொன்தா புயல் ஆந்திர கடற்கரையோரம் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டத. அதன்படி, நேற்று முன்தினத்திலிருந்து ஆந்திராவை நோக்கி பயணித்து, நேற்று இரவு கரையை கடக்கத் தொடங்கியது.
ஆந்திரமான மாநிலம் மசூலிப்பட்டினம், காக்கிநாடா அருகே புயல் கரையை கடக்கத் தொடங்கியபோது, மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசியுள்ளது. அதோடு, விடிய விடிய மழை கொட்டித் தீர்த்துள்ளது. எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காக்கிநாடா, கிருஷ்ணா, எலுரு, கோதாவரி உள்ளிட்ட 7 மாவட்டங்களில், கடலோரப் பகுதிகளில் தங்கியிருந்த சுமார் 2 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மேலும், இன்று காலை வரை வாகனப் போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
‘மொன்தா‘ புயல் இரவில் கரையை கடந்த நிலையில், கடலோர மாவட்டங்களில் பேரிடர் மீட்புத் துறையினர், காவல்துறையினர் உள்ளிட்ட சுமார் 10 ஆயிரம் பேர் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார், சந்திரபாபு நாயுடு அமராவதியில் உள்ள கண்காணிப்பு மையத்தில் இருந்து புயல் மற்றும் மீட்பு பணிகளை பார்வையிட்டு, துரிதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இந்த புயலின் தாக்கத்தால், ஆந்திராவில் 3,778 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். மேலும், ஆந்திராவில் 38 ஆயிம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதமானதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், 1.38 லட்சம் ஹேக்டேர் பரப்பளவில் தோட்டக்கலை பயிர்களும் சேதமடைந்துள்ளன. ‘மொன்தா‘ புயல் கரையை கடந்த நேரத்தில் பெய்த கனமழை காரணமாக, ஆந்திராவில் ஒருவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், ஒடிசாவிலும் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், நிலச்சரிவும் ஏற்பட்டதாக கூறப்பட்டுள்ளது.