ஃபெஞ்சல் புயல் இன்று மாலை 5:30 மணிக்கு கரையை கடக்க தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குறைவான வேகத்திலேயே கரையை கடப்பதால் அடுத்த 3 – 4 மணி நேரத்துக்கு பலத்த காற்று வீசும் என்று கூறப்பட்டுள்ளது.
70 முதல் 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் இரவு 9:30 மணிக்கு புயல் முழுமையாக கரையைக் கடந்து விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரமாக கனமழை பெய்து வந்த நிலையில் புயல் கரையைக் கடக்க துவங்கியுள்ளதால் மழை படிப்படியாகக் குறையும் என்றும் அறிவித்துள்ளது.