சென்னை: ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னையில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால், வெளிநாடுகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளதுடன், விமான சேவை கடும் பாதிப்பு அடைந்துள்ளது. இன்று சென்னையில் இருந்துபுறப்படும் 13 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
பெஞ்சல் புயலின் தாக்கத்தால் சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் நேற்று முதல் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளதுடன், மக்கள் விட்டை விட்டு வெளியே வர வேண்டும் என அறிவுறத்தப்பட்டு உள்ளது.
பலத்த காற்றுடன் பெய்யும் மழையால் மரங்கள் வேரோடு சாய்ந்து, மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. மற்றும் காற்றின் வேகம் அரிகரித்து வருவதுடன் மழை பொழிவும் தீவிரமடைந்துள்ளதால், , சென்னை விமான நிலையத்தில் பல விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. குவைத்தில் இருந்து சென்னை வந்த விமானம், மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமிட்டு சிறிது நேரத்திற்கு பிறகே சென்னையிலேயே தரையிறங்கியது. மேலும் பல விமானங்கள் மற்ற மாவட்டங்களும், அருகே உள்ள பெங்களூருவுக்கும் திருப்பி அனுப்பட்டன.
மேலும், சென்னையில் இருந்து மதுரை, திருச்சி, மைசூர், புவனேஸ்வர், கவுகாத்தி, புனே உள்ளிட்ட பல நகரங்களுக்கு செல்லும் 13 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திருச்சி – சென்னை இடையேயான இண்டிகோ விமானம் இரு மார்க்கங்களிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது.