பாம்பன்:

ஒரிசா அருகே வங்க கடலில் புயல் மையம் கொண்டிருக்கிறது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

புயல் காரணமாக கடல் கொந்தளிப்புடன் இருக்கும். அதனால் மீனவர்களுக்கும், கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக ராமேஸ்வரம் பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.