டெல்லி

ரிசர்வ் வங்கி ஆளுநர் வங்கிகளில் வாடிக்கையாளர்கள் விவரங்கள் சரி பார்க்காமல் புதிய கணக்கு தொடங்க தடை விதித்துள்ளார்.

நேற்று மும்பையில் தனியார் வங்கிகள் இயக்குநர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், ரிசர்வ் வங்கி கவர்னர் சக்தி காந்த தாஸ் கலந்து கொண்டார். இந்த மாநாட்டில் துணை ஆளுநர்கள் மற்றும் ஒழுங்குமுறைத் துறை, கண்காணிப்புத் துறை மற்றும் அமலாக்கத் துறையின் நிர்வாக இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்,

“இந்திய வங்கித்துறை ஆபத்துகளும், சவால்களும் நிறைந்தது. வாடிக்கையாளர்களின் சுயவிவரங்கள் அடங்கிய கே.ஒய்.சி விவரங்களை சரி பார்க்காமல், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்கக்கூடாது. வங்கி ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடாத வகையில் அவர்களுக்கு ஊக்கத்தொகையை கவனமாக கட்டமைக்க வேண்டும்”

என்று தெரிவித்துள்ளார்.