தமிழ்நாடு IFS அதிகாரிகள் இடமாற்றம்
கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையாவை ராஜினாமா செய்ய சொல்லி மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தல்… தற்போது சித்தராமையா இல்லத்தில் ஆலோசனைக்கூட்டம் நடந்து வருவதாக தகவல்…
கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட கலவரத்தில் தீ வைத்து எரிக்கப்பட்ட தமிழக லாரிகளுக்கு அந்த மாநில அரசு தலா ரூ. 25 லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது
மேலும் இயல்புநிலை திரும்பும் வரை கர்நாடகத்திற்க்கு லாரிகள் இயக்கப்படுவதில்லை என அறிவிப்பு
கர்நாடகம்:பதற்றத்தைத் தணிப்பது குறித்து சித்தராமையா முக்கிய ஆலோசனை.
கர்நாடக மாநிலத்தில் பதற்றத்தைத் தணித்து அமைதியை நிலைநாட்டுவது குறித்து ஆலோசிக்க கர்நாடக அமைச்சரவையின் அவசரக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கர்நாடகா மற்றும் கர்நாடக மாநிலம் வழியாக பிற மாநிலங்களுக்கு லாரிகளை இயக்க வேண்டாம் என தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தலைவர் குமாரசாமி சேலத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சுமுக தீர்வு ஏற்படும் வரை தமிழகத்தில் இருந்து லாரிகளை இயக்க வேண்டாம் எனவும் குமாரசாமி கேட்டுக்கொண்டார்
டெல்லியில் நேற்று வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. அதிகபட்ச வெப்பநிலை 34.6 டிகிரி செல்சியஸ் பதிவானது. இது இயல்புக்கும் சற்று அதிகமான அளவாகும். அதேபோன்று குறைந்தபட்ச வெப்பநிலையாக 25.4 டிகிரியாக பதிவானது
சட்ட விரோதமாக இந்தியாவில் தங்கிருந்த 11 வங்கதேசத்தினரை போலீசார் கைது செய்தனர். நேற்று முன்தினம் கல்யாண் கிழக்கு ஷீல்பாடா பகுதியில் உள்ள நில்ஜே கிராமத்தில் சில வங்கதேசத்தினர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீசார் சாதாரண உடை அணிந்து தீவிர கண்காணிப்பில் இறங்கினர். அப்போது அங்கு எந்த ஆவணமுமின்றி சட்டவிரோதமாக தங்கியிருந்த 11 வங்கதேச பிரஜைகளை போலீசார் கைது செய்தனர். இதில் 3 பெண்களும் அடங்குவர்
பெங்களுரூவில் வன்முறை அதிகம் நடைபெறும் 7 இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள 7 இடங்களிலும் வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது
தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்துவிடுமாறு உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, கர்நாடகாவில் நடத்தப்படும் போராட்டங்களால் அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் தமிழ் பேசும் மக்களையும் தமிழ் பதிவெண் கொண்ட வாகனங்களையும் தாக்கி வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பதற்றநிலையை சீர்செய்து அமைதியை நிலைநாட்டுவது பற்றி ஆலோசிக்க கர்நாடக அமைச்சரவையின் அவசரக் கூட்டத்திற்கு முதலமைச்சர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். இந்தக் கூட்டம் இன்று நடைபெறும் என்று உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார். காவிரி விவகாரம் இரு மாநில அரசுகள் சம்பந்தப்பட்டது என்றும், சட்டரீதியாக அணுகி நியாயம் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவிப்போர்மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
தமிழர்கள் முகத்தில் எச்சில் துப்பும் போராட்டம்: வன்முறையை தூண்டும் வாட்டாள் நாகராஜ்! காவிரி பிரச்சனையை தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல் கட்சிகள் : ஆர்.ஜே. பாலாஜி கோபம் -ரேடியோ ஆர்.ஜே.வும், நடிகருமான பாலாஜி தனது பேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது “ஒட்டுக்காக, காவிரி பிரச்சனையை தீர்க்காமல், அதை தூண்டிவிட்டு அரசியல் கட்சிகள் வேடிக்கை பார்ப்பதை இரு மாநிலங்களில் உள்ள மக்களும் முதலில் புரிந்து கொள்ளவேண்டும். அங்கேயும் சரி.. இங்கேயும் சரி.. ஒரு குழுவை சேர்ந்த சிலர்தான் வன்முறையில் ஈடுபடுகிறார்கள். அது வெட்க கேடானது. அதற்காக மாநிலத்தில் உள்ள அனைவருக்கு எதிராக நாம் சமூக வலைத்தளங்களில் கருத்து கூறக்கூடாது.
அப்படி செய்வதால், தமிழக விவசாயிகளுக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. மாறாக, அது கர்நாடகாவில் உள்ள தமிழர்களுக்கு பிரச்சனையை ஏற்படுத்தும். எனவே நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். வெறுப்பு மற்றும் வன்முறையை தூண்டி விடும் விதமான கருத்துகளை நாம் தெரிவிக்க வேண்டாம்.
இந்த காவிரி விவகாரம் மேல்மட்ட அதிகாரிகள் கலந்து பேசி தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனை ஆகும். வன்முறையால் எதையும் சாதிக்க முடியாது” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களுக்கு எச்சரிக்கையும், தமிழர்கள் மீது தாக்குதலும் நடத்துகின்றனர். இதனால் பெங்களூருவில் சட்ட ஒழுங்கை பாதுகாக்க மற்றும் தமிழர்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிப்பதற்காக துணை ராணுவப்படை அதிரடியாக குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.துணை ராணுவப்படை குவிக்கப்பட்டுள்ளதால் வன்முறை சம்பவம் நடைபெறாமல் பெங்களூருவில் உள்ள தமிழகர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று கர்நாடகா டிஜிபி தெரிவித்துள்ளார்
பழிக்கு பழி என்று இன வெறியாக காவிரி விவகாரம் மாறியுள்ளது* – கர்நாடகாவில் காவிரி நதி நீரை தமிழகத்துக்கு திறந்து விடுவதை எதிர்த்து கன்னட அமைப்பினர் தீவிரமாக போராடி வருகின்றனர். கர்நாடக மாநிலத்துக்கு செல்லும் தமிழக அரசு பேருந்துக்கள் அனைத்து அடித்து நொறுக்கப்படுகிறது.இந்நிலையில் ராமேஸ்வரம் பகுதியில் நாம் தமிழர் கட்சியினர் கன்னட பேருந்துகளை அடித்து நொறுக்கினர். தமிழக வாழ்வுரிமை கட்சி அமைப்பினர் கன்னட பேருந்து ஓட்டுனர் ஒருவரை கட்டைகளால் கடுமையாக தாக்கியுள்ளனர்.மேலும் அந்த ஓட்டுனரை மண்டியிடச் செய்து காவிரி தமிழகத்துக்குதான் சொந்தம் என சொல்ல வைத்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழிக்கு பழி என்று இன வெறியாக காவிரி விவகாரம் மாறியுள்ளது
பெங்களூருவுக்கு ராணுவத்தை உடனே அனுப்புமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் கர்நாடக முதல்வர் சித்தராமையா தொலைபேசியில் பேசினார். அப்போது பெங்களூருவில் நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து சித்தராமையா விளக்கம் அளித்தார்.
கனிமொழி பேட்டி: தமிழகத்தில் சிறைக் கைதிகளுக்கு உரிய பாதுகாப்பு இல்லாதநிலை இருக்கிறது என மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரிவிவகாரத்தில் திமுகவின் நிலைப்பாடு குறித்து திமுக தலைவர் உரிய நேரத்தில் முடிவொடுப்பார் என தெரிவுத்த கனிமொழி காவிரி விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும், பேரறிவாளன் சிறையில் தாக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி தமிழகத்தில் சிறைகளுக்குள்ளும் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டினார்.
சென்னை விமான நிலையத்தில் இரு மாநில மக்களும் பாதுகாப்பாக. ஒற்றுமையாக வாழ. பிரதமர் மோடி தலையிட வேண்டும் மு.க ஸ்டாலின் பேட்டி.
திமுக தலைவர் கருணாநிதியின் கேள்வி பதில் அறிக்கை
கேள்வி – ஒருதலைக் காதலுக்கு மற்றும் ஓர் இளம்பெண் பலியாகி இருக்கிறாரே?
கலைஞர் – அண்மைக் காலத்தில் இது ஐந்தாவது பலி. சென்னையில் சுவாதி, விழுப்புரத்தில் நவீனா, கரூரில் சோனாலி, தூத்துக்குடியில் பிரான்சினா, தற்போது விருதாசலத்தில் புஷ்பலதா. இந்த ஐந்து பெண்களின் மரணத்திற்குப் பிறகாவது ஒருதலைக் காதலுக்கு தற்கால இளைஞர்கள் விடுதலை கொடுப்பார்கள், கொடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். பலியான பெண்களின் குடும்பங்களுக்கு அரசினர் உரிய உதவித் தொகையை விரைவில் அளிக்கவேண்டுமென்று வலியுறுத்துகிறேன்.- இதற்கு டுவிட்டரில் பதில் அளித்த ராமதாஸ், ஒருதலைக் காதலை இளைஞர்கள் கைவிட வேண்டும்: கலைஞர் வேண்டுகோள் – வேண்டுமானால் அந்த தறுதலைகளுக்கு விண்ணப்பம் கொடுத்து பாருங்களேன்! என கலாய்க்கும் விதமாக பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த திமுகவினர் பாமக ராமதாஸ் மீது கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழர்களுக்கு எதிரான கர்நாடககாரர்கள் போராட்டத்திற்கு தமிழசை கண்டனம்
கர்நாடகாவில் தமிழர் நடத்தும் பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு வன்முறை கும்பல் தீ வைத்து எரித்தது. சேதங்கள் குறித்து முழு விவரம் தெரியவில்லை
பெங்களூருவில் வன்முறை வெறியாட்டம் தொடர்வதை அடுத்து கர்நாடக அமைச்சரவை அவசரக் கூட்டம் கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் கூடுகிறது
பெங்களூருவில் பேருந்துகள், லாரிகள் தீவைக்கப்பட்டு எரிக்கப்பட்டதால் உச்சகட்ட பதற்றம் நிலவி வருகிறது. தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்துக் கொண்டிருப்பதால் பெங்களூரு முழுவதும் சைரன் சத்தம் கேட்கப்பட்டு வருகிறது
அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பதவியில் இருந்து ராஜ்கோவா நீக்கப்பட்டார். மேகாலயா ஆளுநர் சண்முகநாதன் கூடுதல் பொறுப்பாக அருணாச்சலப் பிரதேச ஆளுநர் பொறுப்புகளை கவனிப்பார் என அறிவிக்கப்பட்டது
ரியோ டி ஜெனிரோ: ரியோவில் நடந்து வரும் மாற்று திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபா மாலிக், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கம் வெற்றுள்ளார்.
ஏற்கனவே பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவை சேர்ந்த 2 பேர் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கம் மற்றும் வெண்கல பதக்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது*
தீபா மாலிக்கிற்கு ஹரியானா அரசு ரூ.4 கோடி பரிசு அறிவிப்பு
கர்நாடகாவிலிருந்து 2 சிறப்பு ரயில்கள் இயக்க பினராயி கோரிக்கை
டில்லி ஆம் ஆத்மி எம்.எல்.ஏ., தேவேந்திர செராவத் சஸ்பெண்ட்
உத்தர பிரதேசத்தில், நாயை சுட்டுக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, எஸ்.ஐ., மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் அளிக்கும்படி, போலீஸ் உயர் அதிகாரிக்கு, மத்திய அமைச்சர் மேனகா உத்தரவிட்டுள்ளார்
மத்திய பிரதேச மாநிலத்தில், உலகின் மிகவும் அரிதான அணு தாதுவான யுரேனியம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் ஆய்வுப் பணிகளை துவக்க, அணு தாது இயக்குனரகம் முடிவு செய்துள்ளது
திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் பேட்டி, காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக மத்திய அரசு அமைக்க வேண்டும்
காவேரி மேற்பார்வை குழு ஒன்று தேவை இல்லை, உச்ச நீதிமன்றம் தான் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உத்திரவிட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கர்நாடகம் மதித்து நடக்கவேண்டும்
மத்திய நீர் பாசன துறை அமைச்சர் கர்நாடகம் விரைந்து நடவடிக்கை வேண்டும்.