டில்லி:
ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பாக நான் பேசினால் பார்லிமென்டில் என்ன மாதிரியான பூகம்பம் வரும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் கூறினார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 16-ந்தேதி தொடங்கியது. ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சிகள் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் இந்த பிரச்சினையை எழுப்பி வருகின்றன.
ரூபாய் நோட்டுகள் விவகாரம் பற்றி சட்ட விதி 56-ன் கீழ் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று கோரி வருகின்றனர். ஆனால், இதற்கு மத்திய அரசு சம்மதிக்கவில்லை..
இதன் காரணமாக  பாராளுமன்றம் இன்று வரை முடங்கியே உள்ளது.

இதுகுறித்து பாராளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் துணைத்தலைவர்  ராகுல் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:
ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டது தொடர்பாக விவாதிக்க அரசு ஏன் தயங்கி வருகிறது. பிரதமர் நாடு முழுவதும் சென்று பேசி வருகிறார். ஆனால் பார்லிமென்டிற்கு வர பயப்படுகிறார் என்றார்.
மேலும்,  ரூபாய் நோட்டு வாபஸ் தொடர்பான விவாதம் நடத்த அரசு தயங்குகிறது. மேலும் என்னை பேச அனுமதிப்பதில்லை. நான் பேச அனுமதிக்கப்பட்டால், பிரதமர் பேச முடியாது என்று கூறினார்.
ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து நான் என்னை பேச அனுமதித்தால், என்ன மாதிரியான பூகம்பம் ஏற்படும் என்பதை நீங்கள் பார்ப்பீர்கள் என்றார்.
பாரதியஜனதா அரசின் மிகப்பெரிய மோசடி ரூபாய் நோட்டுவாபஸ் விவகாரம். இதுகுறித்து. விவாதத்திற்கு நாங்கள் தயாராக உள்ளோம். அனால் அரசு தயங்குகிறது எனக்கூறினார்.
பாராளுமன்ற இரு அவைகளும் எம்.பி.க்களின் அமளி காரணமாக வரும் 14ந்தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது,