டில்லி,
ற்போது நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள ரூபாய் பிரச்சினை பற்றி ஆலோசனைகள் வழங்க 5 மாநில முதல்வர்க்ள் கொண்ட குழு அமைக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கூறியுள்ளார்.
கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வருவதற்கும்,  மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கையாகயாகவும், ரூபாய் நோட்டு தட்டுப்பாட்டை போக்குவதற்கும்  உரிய ஆலோசனைகளை வழங்குவதற்காக 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழு அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
arun-chandra
கடந்த 8ந்தேதி இரவு மத்திய அரசு  500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இதன் காரணமாக பழைய நோட்டுகளை மாற்றவும், புதிய நோட்டுக்காகவும் மக்கள் வங்கி வாசல்களில் காத்துகிடந்து அல்லல் பட்டு வருகிறார்கள்.  நாடு முழுவதும் பெரும் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், செல்லாது என அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடுவும் முடிந்துவிட்டது. செல்லாத நோட்டுகளை வங்கிகளில் மட்டுமே டெபாசிட் செய்யமுடியும் என அரசு அறிவித்து உள்ளது.
நோட்டு செல்லாது என்று அறிவித்து 20 நாட்களை கடந்தும் இன்னும் நிலைமை சீராகவில்லை. மக்கள் இன்று வரை. வங்கிகளிலும், ஏடிஎம் மையங்கள் முன்பும் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள்.
இந்த பிரச்சினையை சமாளிக்கவும், மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவரவும் மத்திய அரசுக்கு தகுந்த ஆலோசனைகளை வழங்க 5 மாநில முதல்வர்கள் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரடு முடிவு செய்துள்ளது.
இந்த குழுவுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமை வகிப்பார் என தெரிகிறது. நிதி அமைச்சர் அருண்ஜேட்லி இருகுறித்து சந்திரபாபுநாயுடுவுடன் விவாதித்ததாக  ஆந்திர முதல்வர் அலுவலக வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆனால், முதலில் மத்திய அரசின் ரூபாய் நோட்டு செல்லாது என்ற பிரச்சினைக்கு ஆதரவு தெரிவித்த நாயுடு தற்போது எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.