புதுச்சேரி:
புதுச்சேரியில் ஊரடங்கை படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார்.

புதுச்சேரி முதல்வர்  நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடடி கிருஷ்ணாராவ், கந்தசாமி உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதையடுத்து  சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் நாராயணசாமி கூறியதாவது,

புதுச்சேரியில் இதுவரை 69 பேருக்கு  நடத்தப்பட்ட சோதனையில்  68 பேருக்கு கோரோனா தொற்று அறிகுறி இல்லை என்று முடிவு வந்துள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளான அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருவாண்டார்கோயில் ஆகிய பகுதிகளில் இருந்தது.
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவருக்கு இப்பொழுதும் கொரோனா தொற்று இருப்பதாக முடிவு வந்துள்ளது. 6வது முறையாக அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி வந்துள்ளது.
கதிர்காமம் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வரும் 3 பேர் ஆரோக்கியமாக இருக்கின்றனர். அவர்களுக்கு தேவையான மருந்து, உணவு வகைகள் கொடுக்கப்படுகிறது.
காரைக்கால், மாஹே, ஏனாம் கடந்த 25 நாட்களாக கொரோனா தொற்று இல்லாத மாவட்டங்களாக இருக்கின்றன.
புதுச்சேரியில் சமூக இடைவெளி, தூய்மை கட்டுப்பாடு மற்றும் விதிமுறைகளுடன் தொழிற்சாலை களை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இங்கு பணிபுரிய தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை.
ஊரடங்கில் தளர்வு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் அதற்கான விதிமுறைகள் புதுச்சேரிக்கு அனுப்பவில்லை. மே 3 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் ஊரடங்கு தொடர்பாக மத்திய அரசும், பக்கத்து மாநிலமான தமிழகம் என்ன முடிவெடுக்கின்றன என்பதை ஆய்வு செய்து புதுச்சேரியில் ஊரடங்கு படிப்படியாக தளர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் சிரமம் பாராமல் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலி யர்கள், துப்புரவு பணியாளர்களுக்கும் மற்றும் சிறப்பாக செயல்படும் மாவட்ட நிர்வாகத்துக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்
இவ்வாறு அவர் கூறினார்.