மும்பை:
கொரோனா குணப்படுத்தப்பட்ட குழந்தையுடன் திரும்பிய தாய்க்கு, அவர் குடியிருந்து வந்த குடியிருப்பாளர்கள் கை தட்டலுன் வரவேற்பு கொடுத்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மகாராஷ்டிராவில் தீவிரமடைந்துள்ளது. அங்குள்ள கஸ்தூர்பா மருத்துவமனையில் கொரோனா அறிகுறி காரணமாக குழ்ந்தை காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப் பட்டது. இது கொரோனா அறிகுறி என்று கருதப்பட்ட நிலையில், 9 நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு, அந்த குழந்தை தாயுடன் குடியிருப்புக்கு திரும்பியபோது, அங்கிருந்த அண்டை வீட்டார்கள் பலத்த கரகோஷத்துடன் வரவேற்பு கொடுத்தனர்.
ஏற்கனவே அந்த குழந்தையின் குடும்பத்தில் மூத்தவரான முதியவர் ஒருவருக்கு கொரோனா தொற்று அறிகுறி உறுதி செய்யப்பட்டது. அவருக்கு ஏற்கனவே ரத்த அழுத்தம் கொண்ட நீரிழிவு நோயாளியாக இருந்த நிலையில், கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி கஸ்தூர்பா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைக்கும் காய்ச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து, அந்த குழந்தையை முதலில் கல்யாணில் உள்ள சாஸ்திரி மருத்துவமனைக்குச் அழைத்துச் சென்றனர், ஆனால் அங்கு, குழந்தையை அனுமதிக்க மருத்துவமனை மறுத்துவிட்டது. பின்னர், “மும்பையில் உள்ள எஸ்.ஆர்.சி.சி மருத்துவமனைக்குச் செல்லலாம் என்றால், அங்கும் அனுமதியில்லை என்று தெரிவித்த நிலையில், 57 கி.மீ தூரம் பயணித்து, ஹாஜி அலியில் உள்ள நாராயண் ஹெல்த் எஸ்.ஆர்.சி.சி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவர்களும் , குழந்தைகளை அனுமதிக்க கோவிட் -19 வார்டு இல்லை என்று கைவிரித்து விட்டனர்.
இதற்கிடையில், அந்த குழந்தைக்கு, காய்ச்சல் குறையாத நிலையில், இறுதியாக கஸ்தூர்பா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, ஏப்ரல் 4ந்தேதி கஸ்தூர்பா மருத்துவமனையை அடைந்த நேரத்தில்,. “மும்பைக்கு வெளியில் இருந்து நோயாளிகளை அனுமதிக்கவில்லை என்று மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.”
ஆனால், அவர்கள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம், மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் டோபேவை அணுகினர். அவர், குழந்தையை அனுமதிக்க மருத்துவமனைக்கு உத்தரவிட்டார். அதையடுத்து, குழந்தை கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த குடும்பம் முழுவதும் சோதனை செய்யப்பட்டது.
இதற்கிடையில் குழந்தையுடன் யார் கொரோனா வார்டில் தங்குவது என்பதில் பிரச்சினை எழ, அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர் குழந்தையை கவனிக்க முன்வந்தார். பாதிக்கப்பட்ட இரண்டு நபர்களுடன் அவர்களுக்கு ஒரு அறை கொடுக்கப்பட்டது.
அதிர்ஷ்டவமாக அந்த குழந்தைக்கு ஒரு நாளில், நிலை மேம்பட்டது. இந்த வாரம், குழந்தைக்கு இரண்டு முறை சோதனை செய்யப்பட்டது, இரண்டு முறை, அவர் எதிர்மறையை சோதித்தார். இதையடுத்து கடந்த சனிக்கிழமை, அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். குழந்தையின் தந்தை மற்றும் தாத்தா பாட்டி இன்னும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குழந்தையும், தாயும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். அவர்களை வீட்டுக்கு அழைத்துச்செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்யப்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த அந்த குடியிருப்பு வீட்டுவசதி சங்க செயலாளர், குழந்தையும், தாயும் மருத்துவமனையில் இருந்து திரும்பி வருவதை அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் தெரிவித்தார்.
இதையடுத்து, அனைத்து குடியிருப்பாளர்கள், தங்களது குடியிருப்பு வாயிலுக்கு வெளியே குழந்தையை வரவேற்க ஆவலோடு சமூக இடைவெளிவிட்டு காத்திருநத்னர்.
ஆம்புலன்ஸ் வாசலில் நிறுத்தப்பட்டு, அவர்கள் இறங்கியதும், அண்டை வீட்டார்கள் பலத்த கைதட்டல்களும் விசில்களுடனும் வரவேற்றனர்.
இதுகுறித்து கூறிய அந்த குழந்தையின் தாய், கடந்த சில நாட்களாக நான் கடுமையான மன வேதனையை அனுபவித்தேன். அது ஒரு கடினமான தருணம், ஆனால் தற்போது தனது குடியிருப்பாளர்கள் கொடுத்திருக்கும் வரவேற்பு, வியக்கத்தக்க பெரிய தருணம்,” என்று தெரிவித்து உள்ளார்.