சென்னை

நேற்றைய ஐ பி எல் போட்டியில் சென்னை அணி 4 விக்கெடுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நேற்று முன் தினம் 10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். திருவிழா கோலாகலமாக தொடங்கியது. கொல்கத்தாவில் நடைபெற்ற தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா அணியை வீழ்த்தி பெங்களூரு அசத்தல் வெற்றியை பதிவு செய்தது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் 5 முறை சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங்செய்தது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு மும்பை அணி 155 ரன்கள் எடுத்தது . சென்னை அணியில் சிறப்பாக பந்து வீசிய நூர் அகமது 4விக்கெட்டுகளும் , கலீல் அகமது 3விக்கெட்டுகளும் எடுத்தனர் .

156 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி முடிவில் 19.1 ஓவரில் 6 விக்கெட்டுகள் இழந்து 158 ரன்கள் எடுத்து வென்றது. மும்பையை வீழ்த்தி சென்னை அணி வெற்றி பெற்றது. சென்னை அணியில் ரச்சின் ரவீந்திரா 65, கேப்டன் ருதுராஜ் 53, ரவீந்திர ஜடேஜா 17 ரன்கள் எடுத்தனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 23 பந்தில் அரைசதம் விளாசினார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். இதனிடையே முதலில் பேட்டிங் செய்த மும்பை அணியில் கேப்டன் சூர்யகுமார் யாதவை மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் எம். எஸ். டோனி. டோனியின் ஸ்டம்பிங்தான் இப்போது சமூக வலைதளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டும் கிரிக்கெட் ரசிகர்களால் வியந்து பேசப்பட்டும் வருகிறது.